மும்பையைச்சேர்ந்தவர் கீதிகாதியாகி (24), பத்திரிகையாளராக இருந்து நடிகையாக அறிமுகமானார். ஒன்-பை-டூ, வாட் தி பிஷ், உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜோலி எல்.எல்.பி.என்ற இந்தி படத்தினைஇயக்கி வருபவர் சுபாஷ்கபூர், கீதிகா தியாகியையும் நடிக்க வைத்துள்ளார்.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன் கீதிகாவிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை, சுபாஷ் கபூரை கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக வீடியோ காட்சி, யூடியுப் சமூகவலை தளத்தில் அப்லோட் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதனை படம் பிடித்து வெளியிட்டது ஒரு நடிகர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இயக்குனரிடம் மொபைல் போன் மூலம் கேட்ட போது பதில் இல்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி