சென்னை:-சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அஜீத் மற்றும் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். பிரபல நடிகர்கள் திரையில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்து பார்க்கும் பழக்கம் இளைஞர்களிடையே பெருகி வருகிறது.
சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பதால்தான், அவர்களுடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் சிகரெட் மற்றும் மதுபோதைக்கு அடிமையாகின்றனர். எனவே இவர்கள் போன்ற முன்னணி நடிகர்கள் இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று பேசினார்.
துப்பாக்கி மற்றும் தலைவா படங்களில் விஜய் குடித்துவிட்டு நடனம் ஆடுவது போன்றும், பில்லா 2, வீரம், மங்காத்தா போன்ற படங்களில் அஜீத் குடித்துவிட்டும், சிகரெட் பிடித்துகொண்டும் நடித்துள்ளார் என்பதை குறிப்பிட்ட கே.ராஜன், இவர்களால்தான் தமிழ் இளைஞர்கள் கெட்டு சீரழிகிறார்கள் என்று கடுமையாக பேசியதால் விழா மேடையே பரபரப்பானது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி