இப்போது படமாகிக்கொண்டிருக்கும் பாடலை கேட்ட விஜய் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திடம் சில திருத்தங்கள் செய்யச் சொன்னாராம்.அனிருத் உடனே அந்த திருத்தங்களைச் செய்து பாடலைப் பதிவு செய்து விஜய்யைக் கேட்க சொல்லியிருக்கிறார்.திருத்தப்பட்ட பாடலை படபிடிப்பு தளத்திலேயே காருக்குள் அமர்ந்துகொண்டு விஜய் கேட்டுக்கொண்டிருந்தாராம். அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொண்டுதான் பாடலைக் கேட்டிருக்கிறார் விஜய். இருப்பினும் பாடலின் சில வரிகள் வெளியே கேட்டிருக்கின்றன.
விஜய்யின் காரிலிருந்து சத்தம் வருவதைக்கேட்டு காரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் அந்த பாடல் வரிகளை விட்டுவிடாமல் தங்கள் மொபைல்ஃபோன்களில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.
ரெக்கார்ட் செய்த பாடல் வரிகள் தற்போது இணையத்தில் வலம் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி