நான் காதலிப்பது உண்மைதான். இரண்டு வருடமாக இந்த காதல் நீடித்து வருகிறது. காதலன் யார்? என்பது பற்றி சொல்ல முடியாது. இது எனது சொந்த விஷயம். எனவே விரிவாக பேச விரும்பவில்லை. இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் துவக்கத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆவேன். தற்போது என் முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது. கைவசம் உள்ள படங்களை விரைவில் முடித்துக் கொடுப்பேன்.இவ்வாறு கூறினார்.
பாவனாவின் காதலன் என கிசு கிசுக்கப்படும் நவீன் கூறும் போது, ‘‘பாவனாவுக்கும், எனக்கும் காதல் இல்லை. எங்களை இணைத்து பேசுவது வதந்தி தான். படப்பிடிப்பில் நாங்கள் நட்பாக பழகினோம். தற்போது அவருடன் தொடர்பு இல்லை. நாங்கள் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி