1928ஆம் ஆண்டு Santa Monica என்ற நகரத்தில் பிறந்த Shirley Temple, ஹாலிவுட்டின் முதல் குழந்தை நட்சத்திரம் என்று அன்போடு அழைக்கப்படுவார். இவர் தனது மூன்று வயதில் முதல் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இவர் தனது 22 வது வயதில் 1950ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் இதுவரை 43 திரைப்படங்கள் நடித்துள்ளார்.இவர் 1945 முதல் 1950 வரை ஜான் அகர் என்பவருடனும் 1950 முதல் 2005 வரை சார்லஸ் அல்டன் பிளாக் என்பவருடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கானா மற்றும் செக்கோஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவின் தூதராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் கலிபோர்னியாவில் வூட் சைடு என்ற நகரில் இருந்த தனது வீட்டில் அவர் மரணம் அடைந்தார் என்றும் அவரது மரணம் இயற்கை மரணம்தான் என்றும் அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். இவருடைய இறுதிச்சடங்கு இன்று அவருடைய சொந்த ஊரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் பிரபலங்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி