கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியில் நடிக்க தயார். ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி அவசியம் என்பதால் அதுமாதிரி நடித்தேன். ‘புலிவால்’ படத்தில் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னபோது மறுக்கவில்லை.
பெரிய நடிகைகள்கூட இப்போது முத்த காட்சிகளில் நடிக்க மறுப்பது இல்லை. கதைக்கு தேவை என்றால் முத்த காட்சிகளில் நடிக்க தயங்கமாட்டேன். தமிழில் நிறைய படங்களில் நடித்தும் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.
சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். நிச்சயம் எனக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்கும். மலையாளத்தைவிட தமிழ் படங்களில் நடிக்கவே விருப்பம் உள்ளது. இங்கு சம்பளமும் நிறைய கிடைக்கிறது. ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆட அழைத்தால் சம்மதிப்பேன். ஆனால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஆடுவேன்.இவ்வாறு ஓவியா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி