ஹாலிவுட்:-ஹாலிவுட்டில் 1987–ல் ரோபோ காப் என்ற விஞ்ஞான ரீதியிலான ஆக்ஷன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. தொடர்ந்து மேலும் சில ரோபோ காப் படங்கள் வந்தன. அந்த வரிசையில் 2014–ம் வருடத்திய புதிய ரோபோ காப் படம் தயாராகி விரைவில் வெளியாக உள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோஸ் பட்சிலா இயக்கியுள்ளார். இதில் ரோபோ காப் கேரக்டரில் ஜோயலும் அதை தயார் செய்யும் ராணுவ அதிகாரியாக ஜாக்சி ஏல் ஹெலேயும் தோன்றுகின்றனர்.
2029–ம் ஆண்டு இப்படத்தின் கதை நிகழ்கிறது. பெரிய நிறுவனம் ஒன்று எந்திர மனிதர்களை உருவாக்கி உரிய சாதனைகள் செய்கிறது. அவை போர்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. விபத்துக்குள்ளாகும் ஒரு அதிகாரி எந்திர மனிதனாக மாற்றப்படுகிறார். அவர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளே கதை. சோனி பிச்சர்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி