இந்நிலையில், நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால், தான் தவறவிட்ட காதலனை தேடிக் கண்டுபிடிக்க, நியூயார்க் நகர் முழுவதும், 300 போஸ்டர்களை, மரியா ஒட்டியுள்ளார். தான் பார்த்த நபரின் அங்க அடையாளங்களுடன், அவரின் அழகையும் வர்ணித்துள்ளார். “இப்படிப்பட்ட காதலனை நான் இழந்து தவிக்கிறேன். நியூயார்க் மக்களே தயது செய்து உதவி புரியுங்கள்; என் காதலே மீண்டும் வா’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை, நியூயார்க் நகரின் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், சிக்னல்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் மரியா ஒட்டியுள்ளார். “”என் காதல் உண்மையானது; அழகுக் காதலன் நிச்சயம் மீண்டும் வருவான்,” என, மரியா தன் நண்பர்களிடம் கூறி வருகிறார்.
காதலர் தினத்தில், வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்த பலரும் பல முயற்சிகளில் ஈடுபடும் நிலையில், அவர் யார், எங்கிருக்கிறார் என்ற எந்த விபரமும் தெரியாத காதலருக்காக, மரியா நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். மரியாவின் இந்த செயலை, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி