செய்திகள் அமெரிக்க மியூசியத்தில் திடீரென தோன்றிய 20 அடி பள்ளம்…

அமெரிக்க மியூசியத்தில் திடீரென தோன்றிய 20 அடி பள்ளம்…

அமெரிக்க மியூசியத்தில் திடீரென தோன்றிய 20 அடி பள்ளம்… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவின் Kentucky என்ற நகரத்தில் NationalCorvette Museum என்ற பழங்கால மியூசியம் ஒன்று உள்ளது. பெரிய சுற்றுலா ஸ்தலமான இந்த மியூசியத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கில் பார்வையாளர்கள் வந்து போவார்கள்.

இந்த மியூசியத்திற்கு சொந்தமாக 6 கார்கள் இங்குள்ள கார் ஷெட்டில் நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மிகச்சரியாக அதிகாலை 5.40 மணிக்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்த ஷெட்டில், 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்களும் பூமிக்குள் புதைந்தன.

அதிகாலை நேரம் என்பதால் அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. எனவே இந்த சம்பவம் காரணமாக எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை. தகவல் கிடைத்தவுடன் Museum Executive Director Wendell Strode உடனே நேரில் வந்து 20 அடி பள்ளத்தை பார்வையிட்டு, தற்காலிகமாக மியூசித்தை மூட உத்தரவிட்டார். இந்தசம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி