செய்திகள்,திரையுலகம் சினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்குடுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா!…

சினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்குடுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா!…

சினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்குடுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-சர்ச்சை நடிகைகளில் எப்போதுமே நயன்தாராவுக்கு இடமுண்டு. வந்த புதிதில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர் தொடர்ந்து சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் சிக்கல்களில் மாட்டிசின்னா பின்னாமானார்.அதிலிருந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இப்போதும் கூட ஆர்யா மாதிரியான ஹீரோக்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுகிறார்.

இதற்கிடையே தனது சினிமா ஃலைப்பை பற்றி பேசியிருக்கிறார் நயன்தாரா.அதில் அவர் கூறியிருப்பதாவது:-சினிமா உலகத்தில நான் நிறைய கத்துக்கிட்டேன். நம்ம வாழ்க்கையில பிரச்சினை வர்றதே அதுல இருந்து பாடம் கத்துக்கத்தான். சினிமா உலகம் எப்படி பணம், புகழைக் கொடுக்குதோ அதுக்கும் மேல நிறைய பாடங்களைக் கொடுக்கும். அந்த வகையில் நான் நிறைய கத்துக்கிட்டேன்.

நான் சமாளிக்கிறதா நினைக்க வேண்டாம். இப்போ நிறைய படங்கள் தொடர்ச்சியா பண்ணிட்டே இருக்கேன். திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவே இல்ல. இந்த நிமிஷம் ரொம்ப நிறைவா என்னோட வேலையை செஞ்சுகிட்டு இருக்கேன். கல்யாணத்துக்காக நான் காத்திருக்கலை.ஆனா, அதேநேரம் கல்யாணத்தைத் தவிர்க்க விரும்புற ஆளும் நான் இல்லை. எல்லாம் நடக்குறப்ப நல்லபடி நடக்கும். என்று கூறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி