செய்திகள்,திரையுலகம் ஆஸ்கர் விருது விழாவில் கவுரவிக்கப்படும் ‘சூப்பர் ஹீரோக்கள்’…

ஆஸ்கர் விருது விழாவில் கவுரவிக்கப்படும் ‘சூப்பர் ஹீரோக்கள்’…

ஆஸ்கர் விருது விழாவில் கவுரவிக்கப்படும் ‘சூப்பர் ஹீரோக்கள்’… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவின் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட் மற்றும் அறிவியல் அகடமி இணைந்து நடத்தும் 86ஆவது அகடமி விருதுகள் விழாவில் 2013ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் கவுரவிக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள சாமுவேல் கோல்டுவின் திரையரங்கில் எலன் டிஜெனரசால் நடத்தப்பட உள்ளது.

ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுவதால் எப்போதும் நடைபெறும் தேதியைவிட ஒரு வாரம் தள்ளி இந்த விருது வழங்கு விழா நடைபெறுகின்றது.இந்த விழாவில் திரைப்படத் துறையின் 24 பிரிவுகளில் அளிக்கப்படும் விருதுகளுடன் அயர்ன் மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற சிறப்புத் தோற்றம் கொண்ட கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க ஆஸ்கர் குழு திட்டமிட்டுள்ளது.

திரைப்படத்துறையின் வரலாற்றில் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தவர்கள் என்ற முறையில் இத்தகைய கதாபாத்திரங்கள் சிறப்பிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த வருடத்திய விருது நிகழ்ச்சியில் ‘ஸ்டார் வார்ஸ்‘ திரைப்படத்தின் லியுக் ஸ்கைவாக்கர், ‘மேட்ரிக்ஸ்’ படத்தின் சை-பை ஹீரோவான நியோ, ‘லார்ட் ஆப் ரிங்ஸ்’ படத்தின் தி ஹாபிட் மற்றும் விசார்ட் கன்டால்ப். ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி