சென்னை:-‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்‘ சமீபத்தில் கிறிஸ்துவ பாதிரியார் தங்கையா என்பவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி வாங்கியதாக ‘தமிழ் கிறிஸ்டியன்‘ என்ற ஃபேஸ்புக் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிக்காக அவர் சிறப்பு பிரார்த்தனை செய்ததாகவும் அவர் விரைவில் ஊரறிய கிறிஸ்துவ மதத்திற்கு மாற இருப்பதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.அந்த பாதிரியார் ரஜினிக்கு பிரார்த்தனை செய்தபோது ரஜினிகாந்த் கண்களை மூடி தன்னை முழுமையாக அந்த பிரார்த்தனையில் ஈடுபடுத்தியதாக சில புகைப்படங்களும் ஃபேஸ்புக்கில் வெளியாகி உள்ளது.
ஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பிடம் கேட்டபோது பாதிரியார் தங்கையா உடன் உள்ள நட்பு மற்றும் மரியாதை காரணமாக அவருடைய பிரார்த்தனையில் ரஜினி கலந்துகொண்டதாகவும், ரஜினிக்கு மதம் மாறும் எண்ணம் சிறிதும் இல்லை என்றும் அவர் இந்து மதத்தில் தீவிர நம்பிக்கை உடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி