செய்திகள்,திரையுலகம் சிம்பு,நயன்தாரா இணையும் படத்தின் பெயர் ‘இது நம்ம ஆளு’…

சிம்பு,நயன்தாரா இணையும் படத்தின் பெயர் ‘இது நம்ம ஆளு’…

சிம்பு,நயன்தாரா இணையும் படத்தின் பெயர் ‘இது நம்ம ஆளு’… post thumbnail image
சென்னை:-சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் பெயர் குறித்து சீரியஸாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.இந்த படத்திற்கு ‘கதவை திற காதல் வரும்’, ‘என்ன பொண்ணுடா இவ’, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டன.

ஆனால் இந்த டைட்டில்கள் எதுவும் திருப்தி தராததால் தற்போது ‘இது நம்ம ஆளு‘ என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே இந்த டைட்டிலில் பாக்யராஜ் படம் ஒன்று வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுகுறித்து பாக்யராஜிடம் முறைப்படி பேசி அனுமதி பெற்று இந்த பெயரையே படத்திற்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘இது நம்ம ஆளு’ என்ற பெயர் சிம்புவை மிகவும் கவர்ந்துவிட்டதாம். கடந்த சில வருடங்களுக்கு முன் நயன்தாராவை சிம்பு காதலிக்கும்போது நயனை பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது ‘இது நம்ம ஆளு’ என்று சொல்லித்தான் அறிமுகப்படுத்துவாராம். இந்த டைட்டிலை கேட்கும்போதெல்லாம் அவருக்கு பழைய ஞாபகம் வருவதாக சிம்பு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி