சென்னை:-முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என, பிடிவாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்யாவிடம், இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களிலும் நடித்தால் தான், தன் திறமையும் பளிச்சிடும் என்பதால், இப்போது, சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும், முயற்சி எடுத்து வருகிறார்.
இதையடுத்து, கிரிக்கெட் வீரர் ஒருவரை, துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக, ஒரு படத்தில், தற்போது நடித்து வருகிறார். இந்த படம் வெளி வந்ததும், கோடம்பாக்கத்தில், என் அடையாளமே மாறி விடும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார், ஸ்ரீதிவ்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி