செய்திகள்,திரையுலகம் அழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…

அழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…

அழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை… post thumbnail image
சென்னை:-எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் எல்லாம் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்ததும் மேக்கப் போட்டுக்கொண்டு அன்றைக்கு படமாகும் காட்சிகளின் டயலாக்குகளை தெரிந்து கொண்டு ரிகர்சலை தொடங்கி விடுவார்கள். அதையடுத்து சொன்னபடி 9 மணிக்கே கேமரா முன்பு வந்து விடுவார்கள். அதேபோல் 6 மணிக்கு பேக்கப் ஆனதும் இயக்குனர், தயாரிப்பாளர், கேமராமேன் தொடங்கி அனைவரிடமும் சொல்லிவிட்டே ஸ்பாட்டை விட்டு வெளியேறுவார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் தொழில் பக்தி இருந்தது.

ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. பெரும்பாலான நடிகர்-நடிகைகள் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு வருவதே இல்லை. அப்படியே வந்தாலும், செல்போனில் கடலை போடுவதுதான் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் பல நடிகைகள் இருக்க, இப்போது வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் படங்களில் நடித்த மனீஷாயாதவும் இணைந்துள்ளார்.அதாவது, ஒருநாள்கூட சொன்ன நேரத்திற்குள் ஸ்பாட்டுக்கு வர மாட்டாராம். அதேபோல் பேக்கப் ஆகும் 6 மணி வரை படப்பிடிப்பில் இருக்கவே மாட்டாராம். ஷாப்பிங் போகனும், நண்பர்களை பார்க்கப்போகனும் என்று ஏதாவது காரணத்தைச்சொல்லிவிட்டு எஸ்கேப்பாகி விடுகிறாராம். இதனால் ஒருநாள் இரண்டுநாள் பொறுத்துக்கொள்ளும் டைரக்டர்கள். சில நாட்களில் முக்கியமான காட்சியை படமாக்கும்போதும் வழக்கம்போல் மனீஷா தாமதமாக வருவதால் கோபத்தின் உச்சத்துக்கே சென்று விடுகிறார்களாம்.

கோபத்தின் வெளிப்பாடாக கடின வார்த்தைகளால் சிலசமயங்களில் மனீஷாவை சுட்டெரித்து விடுகிறார்களாம். அதைக்கேட்டு ஆடிப்போகும் மனீஷா, இனிமேல் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் சார். இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிடுங்க, ப்ளீஸ்… ப்ளீஸ் என்று பள்ளி மாணவி போன்று பதறுபவர், டைரக்டர்கள் ஓவர் டோஸ் விட்டால் அழுதே விடுகிறாராம். இதனால் அதன்பிறகு அவரை சகஜநிலைக்கு கொண்டு வருவதற்குள் மேற்கொண்டும் மணிக்கணக்கில் நேரம் பிடிக்கிறதாம். அந்த அளவுக்கு அழுமூஞ்சியாக இருக்கிறாராம் மனீஷா.அதனால் இப்போதெல்லாம் யாராவது மனீஷா பற்றி பேச்செடுத்தாலே, யாரு அந்த அழுமூஞ்சி நடிகையா? என்று கேட்கும் அளவுக்கு கோடம்பாக்கத்தில் மனீஷாவின் புகழ் பரவிக்கிடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி