இந்நிலையில் விஜய் – முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது. “துப்பாக்கி” படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்தப் படத்திற்கு “துப்பாக்கி 2” என்கிற தலைப்பு வைக்கப்படலாம் என கூறப்பட்டது. எனவே, படத்தின் தலைப்பு குறித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு “வாள்” என்று தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனிடம் தேதி கேட்கப்பட்டதாம். ஆனால் தற்போது அவர் மிகவும் பரபரப்பாக இருப்பதால் சமந்தாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸும், கலை இயக்குனராக “தேசிய விருது” பெற்ற லால்குடி இளையராஜாவும் பணியாற்ற உள்ளனர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி