இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சமீரா ரெட்டி வீட்டில் நடந்தது. அப்போது, வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கும் என்று இரு குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென சமீரா திருமணத்தை அவசரமாக நடத்தி முடிக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.இதையடுத்து இன்று மாலை அவர்கள் திருமணம் மும்பையில் ரகசியமாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் ரகசியமாக நடக்கின்றன. இதுபற்றி அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது, சமீரா- அக்ஷய் திருமணம் இன்று நடக்க உள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கலந்துகொள்கின்றனர் என்றனர்.
சமீராவின் அம்மா நட்சத்திரா ரெட்டியிடம் கேட்டபோது, சமீரா திருமணம் நடப்பது உண்மைதான். தற்போது நான் பூஜையில் இருக்கிறேன்.இது பற்றி விவரமாக பேச முடியாது என்றார். மணமகன் அக்ஷய்க்கு நெருங்கிய ஒருவர் கூறுகையில், தனது தொழிலை விரிவுபடுத்தும் பணிக்காக அக்ஷய் வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இதனால்தான் அவசரமாக இன்று கல்யாணம் நடக்கிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி