ஆனால் உண்மை அதுவல்ல. சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் ப்ரண்ட்ஸாகி விட்டார்கள். பழைய பகையை மறந்து, புதிய நண்பர்களாகி விட்டதால், இருவரும் சந்தித்துக்கொள்ளும்போதே, அவர்களது சிரிப்புச்சத்தம்தான் ஜாஸ்தியாக கேட்கிறதாம். ஆக, மறுபடியும் அவர்கள் ராசியாகி விட்டார்கள் என்பதை அது உணர்த்தியுள்ளது.
இந்நிலையில், வாலு படத்தில், நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகாவே மை டார்லிங் என்று சிம்பு பாடுவது போன்று ஒரு பாடல் உள்ளதாம். அதோடு படத்தின் காதலியும், நிஜ காதலியுமான ஹன்சிகாவின் அழகை எக்கசக்கமாக வர்ணித்து சிம்பு பாடுவது போல் அமைந்துள்ளதாம். ஆக, இந்த பாடல் மூலம் நயன்தாராவுடன் தான் மீண்டும் இணைந்து நடித்தாலும், எனது டார்லிங் இனிமேல் ஹன்சிகா மட்டுமே என்பதையும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறாராம் சிம்பு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி