உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்களிடம் பேசிய அவரது சகோதரியிடம் ஸ்வென் இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தவறான தகவலை அளித்துவிட்டனர். உடனடியாக சகோதரருக்கு இரங்கல் தெரிவிக்க முடிவு செய்த அவரது தங்கை, தனது எண்ணத்தின்படியே பத்திரிக்கையில் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
இந்த இரங்கல் செய்தியை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த ஸ்வென் கண்டபோது கடும் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே அவரது உடமைகளை எடுத்து வர மருத்துவமனைக்கு வந்த சகோதரியின் நண்பரும், அங்குள்ள படுக்கையில் அவர் உயிரோடு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அதிர்ச்சியிலிருந்து மீண்ட ஸ்வென், இது குறித்து மறுப்பறிக்கை வெளியிடுமாறு அப்பத்திரிக்கையை கேட்டுக்கொண்டார். முதலில் அதிர்ச்சியடைந்த அவர் பின்னர் இச்சம்பவத்தை நினைத்து சிரித்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி