இந்த படத்தில் விதார்த்தும், மனீஷா யாதவ்வும், மழையில் நனைந்தபடி படுகவர்ச்சியான உடையில் ஒரு பாடல் காட்சிக்கு நடித்துக்கொண்டிருந்தனர். இந்த காட்சியை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கிராமத்து பின்னணியில் செட்டிங்ஸ் போட்டு படமாக்கினார் இயக்குனர். இந்த பாடல் காட்சியில் ஒரு முத்தக்காட்சி வருவது போன்று அமைக்க விரும்பினாராம் இயக்குனர். அதை விதார்த்திடமும், மனீஷாவிடமும் கூற மனிஷா உடனே ஓகே சொல்லிவிட்டு முத்தம் கொடுக்க தயாராகிவிட்டாராம்.
ஆனால் விதார்த் ஒவ்வொரு தடவை முத்தம் கொடுக்கும்போது கூச்சத்தோடு நடிக்க இந்த காட்சி எட்டு டேக்குகளுக்கு மேல் எடுக்கப்பட்டதாம். உண்மையிலேயே கூச்சத்தோடுதான் நடித்தாரா அல்லது பல டேக்குகள் எடுக்கவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே டேக்குகளில் சொதப்பினாரா என்று படக்குழுவினர் புரியாமல் இருந்ததுதான் வேடிக்கை. முத்தக்காட்சியில் நடித்த மனீஷா கொடுத்த கமெண்ட் என்ன தெரியுமா? “ஒரு முத்தம் கூட ஒழுங்கா கொடுக்க தெரியலை , இவரெல்லாம் என்னத்தை பெரிய நடிகராவது” என்பதுதான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி