வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் அஜீத், நாடு திரும்பியவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. முற்றிலும் வெளிநாட்டில் படமாகவுள்ள இந்த த்ரில்லிங் ஆக்ஷன் கதையின் திரைக்கதையை முழுவதுமாக முடித்துவிட்டார் கவுதம் மேனன். அஜீத் வந்தவுடன் அவரிடம் திரைக்கதையை காட்டிவிட்டு படப்பிடிப்பை தொடங்கவேண்டியதான் பாக்கி என கவுதம் மேனன் கூறியுள்ளார்.இந்த படத்தில் முதன்முதலாக அஜீத்துடன் ஜோடி சேருகிறார் அனுஷ்கா. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏற்கனவே இரண்டு பாடல்களுக்கு டியூன் போட்டு கொடுத்துவிட்டார்.
அமெரிக்கா, மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன. அதற்கான லொகேஷன் பார்க்க அடுத்த வாரம் இயக்குனர் தனது உதவியாளர்கள் குழுவுடன் அமெரிக்கா செல்ல இருக்கிறார். ஏற்கனவே கவுதம்மேனனின் அனைத்து படங்களிலும் அமெரிக்கா வருவதால் இதுவரை படமாக்கப்படாத அமெரிக்க பகுதிகளை தேடும் வேட்டையில் கவுதம் மேனன் ஈடுபட போகிறார்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி