கேடி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் கல்லூரி படம்மூலம் பேசப்பட்டார். தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு சினிமா பக்கம் போனார். ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ‘வீரம்’ படம் மூலம் வந்துள்ளார்.
முதன்முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ள தமன்னா, வீரம் பற்றியும், இனி தன் எதிர்கால சினமா பற்றியும் தினமலருக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், வீரம் படத்தில் முதன்முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளேன். இந்தப்படத்தில் சிற்பங்களை புதுப்பிக்கும் கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன்.
அஜீத்துடன் நடித்தது ஒரு புதுவித அனுபவம். தான் ஒரு பெரிய நடிகர் என்ற எந்த பந்தாவும் இல்லாதவர் அஜீத். தன்னை மட்டுமே படங்களில் மிகைப்படுத்தாமல், தன்னுடன் நடிக்கும் அத்தனை நடிகர், நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். சின்னவர், பெரியவர் என்று பாராமல் எல்லோரையும் ஊக்குவிப்பவர். மொத்தத்தில் ரொம்ப எளிமையான மனிதர் என்று கூறினார். மேலும் இனி வருங்காலங்களில் நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் என்றும், ரசிகர்கள், முன்பு போல் என்னை மீண்டும் கொண்டாடுவார்கள் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி