பசங்க படத்தில் நடிகரானவர் விமல். அதையடுத்து களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலிருந்து மினிமம் கியாரண்டி ஹீரோவாக அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் ஜன்னல் ஓரம் வெளியானது.
அப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படம், நேற்று இன்று, புலிவால் ஆகிய படங்களில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்க, வெயிலோடு விளையாடு, அஞ்சல், மஞ்சப்பை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஆக, எப்போதும் பிசியாகவே இருக்கிறார் விமல்.
இந்த நிலையில், ஏற்கனவே ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவாகியிருந்த விமலுக்கு நேற்று இன்னொரு மகனும் பிறந்திருக்கிறான். ஆக, இரண்டு குழந்தைக்கு அப்பாவாகிவிட்ட விமல், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்த சந்தோசமான விசயத்தை தனது திரையுலக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் விமல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி