சேலம் மெய்யனூர் ரோட்டில் உள்ள 5 தியேட்டரில் ஜில்லா, வீரம் ஆகிய இருபடங்களும் திரையிடப்பட்டன. இதனால், தியேட்டர் முன்பு விஜய், அஜீத் ரசிகர்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். அங்கு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விஜய் ரசிகர்கள், அவரது கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
மேலும் சேலம் குரங்குச்சாவடியில் இருந்து விஜய் ரசிகர்கள், அலகு குத்தியபடி வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் படம் ஓடும் தியேட்டர் முன்பு ஊர்வலம் வந்ததும், அங்கு திருஷ்டி பூசணிக்காயை உடைத்து பூஜை செய்தனர். மேலும் ஒரு குழுவினர் சேலம் ராஜகணபதி கோவிலில் பூஜை செய்து தேங்காய் உடைத்தனர். இதுபோல மாவட்டம் முழுவதும் விஜய், அஜீத் திரைப்படங்கள் ஓடிய தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி