செய்திகள் 17 லட்சம் ரூபாயை ரோட்டில் எரித்த சகோதரிகள்…

17 லட்சம் ரூபாயை ரோட்டில் எரித்த சகோதரிகள்…

17 லட்சம் ரூபாயை ரோட்டில் எரித்த சகோதரிகள்… post thumbnail image
இஸ்லாம்பாத்:-பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஜெலம்ஸ் பிலால் நகரில் வசிக்கும் இரு சகோதரிகள் பெயரில் அங்குள்ள பாகிஸ்தான் தேசிய வங்கியில் 17 லட்ச ரூபாய் பணம் வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டிருந்தது.

நஹீத் மற்றும் ரூபினா என்ற அவ்விரு பெண்களும் மூன்று தினங்களுக்கு முன் அந்த வங்கிக்கு சென்று தங்கள் பெயரில் சேமித்து வைக்கப்பட்ட தொகை முழுவதையும் திரும்ப பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகளிடம் உடனடியாக அத்தொகையை வழங்குமாறும் அவர்கள் கோரினர். ஆனால் வங்கி நடைமுறைகளை முடித்த பின் தான் அத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து திரும்பிச்சென்ற அப்பெண்கள் நேற்று மறுபடியும் வங்கிக்கு வந்து வங்கி மேலாளரிடம் அப்பணத்தை தருமாறு கேட்டனர். வங்கி அதிகாரிகளும் அத்தொகையை அவர்களிடம் வழங்கினர். உடனடியாக வங்கிக்கு வெளியே வந்த அப்பெண்கள் 17 லட்ச ரூபாயையும் நடுரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். அப்போது இதை கண்ட பொதுமக்களில் ஒருவர் தீயை அணைக்க முற்பட்ட போது, மூத்த சகோதரி உடனடியாக தனது துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டினார். மேலும் தங்கள் பணத்தை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ள தங்களுக்கு உரிமையுள்ளது என தெரிவித்தார்.
ஏராளமான பொதுமக்கள் திரண்டு நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். இறுதியில் காவல்துறையினர் அங்கு வந்து முற்றிலுமாய் எரிந்த ரூபாய் நோட்டுகளின் சாம்பலை அள்ளிச்சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி