இந்நிலையில், தற்போது 26 வயதாகும் கங்கனாவிடம் திருமணம் குறித்து மீடியாக்கள் கேட்டதற்கு, என் வாழ்வில் அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறியுள்ளார்.மேலும், இதுவரை தனி மனுஷியாக இருந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இதனால் நான் சந்தோசமாக இருப்பதோடு, எல்லா விசயங்களையும் சுயமாக முடிவெடுக்கிறேன்.இந்த வாழ்க்கை தான் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னை இன்னொருவர் வழி நடத்துவதை நான் எப்போதுமே விரும்பியதில்லை. அதனால்தான் திருமணம் செய்வதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை.
ஒருவேளை அப்படி நடந்தால், குடும்ப சுமை மட்டுமின்றி, பிரச்னைகளுக்கும் வாய்ப்பிருக்கும். அதோடு, திருமணம் செய்து கொண்ட பல நடிகர்-நடிகைகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்களின் திருமணம் இரண்டொரு ஆண்டுகளிலேயே விவாகாரத்தில்தான் முடிந்திருக்கிறது. அதுமட்டுமின்றி அதன்பிறகு உளச்சலிலேயே அவர்கள் வாழ வேண்டும்.என்வாழ்க்கையில் இந்த மாதிரி பிரச்னைகள் வரவே கூடாது என்று நினைக்கிறேன். அதனால்தான் திருமணம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.இப்படியே பிரச்னை இல்லாத, நிம்மதியான வாழ்க்கையை வாழவே ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி