செய்திகள் தர்பூசணி ‘ஜூஸ்’!…

தர்பூசணி ‘ஜூஸ்’!…

தர்பூசணி  ‘ஜூஸ்’!… post thumbnail image

தேவையானப்பொருட்கள்:

தர்பூசணி விதை நீக்கி நறுக்கியது – 1 கப்
தயிர் – 1/2 கப்
எலுமிச்சம் பழச்சாறு – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
புதினா – சிறிது
சாம்பார் வெங்காயம் – 2

செய்முறை:

சாம்பார் வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி கழுவிக் கொள்ளவும். தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும். கண்ணாடி டம்ளர் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும் இப்போது சுவையான தர்பூசணி ‘ஜூஸ்’ ரெடி . .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி