மலையாள காமெடி நடிகர் ‘பக்ரு’ உலகிலேயே உயரம் குறைவான ஹீரோ என்ற கின்னஸ் சாதனையை ஏற்படுத்தி தன் பெயரையும் கின்னஸ் ‘பக்ரு’ என்றே மாற்றிக் கொண்டார். ‘குட்டியும் கோலும்’ என்ற மலையாள படத்தை டைரக்ட் உலகிலேயே உயரம் குறைவான சினிமா டைரக்டர் என்ற கின்னஸ் சாதனையும் ஏற்படுத்தினார்.
‘பக்ரு’ டைரக்ட் செய்த குட்டியும் கோலும் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘சக்தி விநாகயம்’ என்ற பெயரில் பொங்கல் அன்று ரிலீசாகிறது. உயரம் குறைந்த குள்ளமான ஒருவனுக்கு வரும் காதலும், அதனால் வரும் பிரச்னைகளும்தான் கதை. பக்ரு வாழ்க்கையில் நடந்த சம்பங்களின் அடிப்படையில் இந்த படத்தை அவர் எடுத்திருந்தார். பக்குருவுடன் ஆதித்யா, ரேணிகுண்டா ஹீரோயின் சனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். காமெடியும், செண்டிமெண்டும் கலந்த கதை என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி