துபாய்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைவிட 6 புள்ளிகள் பின்தங்கிய ஆஸ்திரேலிய அணி (114) இரண்டாம் இடத்திலும், 111 புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாமிடத்திலும் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் தான் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
அதேசமயம் இந்திய அணியின் வெற்றி தோல்வியைப் பொருத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் தரநிலையில் முன்னேற்றம் ஏற்படும். இந்தியாவை விட நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் இரு அணிகளும் உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி