கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜனவரி 21, ஆம் தேதி சர்வதேச “காபிதினம்” கொண்டாடப்பட உள்ளது. மாநில காபி வாரியம் மற்றும் மத்திய வர்த்தக துறையி்ன் காபி வாரியமும் இணைந்து நடத்த உள்ளது.
இத்திருவிழாவில் புதிய வகை காபியை அறிமுகப்படுத்தவும், புதிய தொழில் நுட்ப முறைகளை வெளிப்படுத்தவும் உள்ளதாக காபி வாரிய சேர்மன் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். முன்னதாக காபி திருவிழா மூன்று முறை பெங்களூருவிலும் நான்காவதாக புதுடில்லியிலும் நடைபெற்றது. தற்போது 5-வது முறையாக மீண்டும் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வர்கள் என எதிர் பார்க்கப்படுகிறது என்று அறிவித்தனர்.
இத்திருவிழாவில் கர்நாடக மாநிலத்தை தவிர காபி உற்பத்தி செய்யும் கேரளம் மற்றும் தமிழகமும் பங்கேற்க இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி