உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ஜில்லா படம் திரையிடப்பட உள்ளது என்று ஆர்.பி.சவுத்ரி கூறினார்.கேரளாவில் வெளியாகும் உரிமையை மோகன்லால் வாங்கி இருப்பதாகவும், கேரளா முழுவதும் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஆர்.பி.சவுத்ரி கூறும் போது விஜய்யை வைத்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 6–வது படம் இது. விஜய் தற்போது மாஸ் ஹீரோவாக உள்ளார். அதற்கேற்ப இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.
அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. பெரிய வெற்றி பெறும் என்றும் கூறினார். டைரக்டர் நேசன் கூறும் போது விஜய், மோகன்லால் என இரு பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கியுள்ளேன். விஜய் என்னை புதுமுக இயக்குனராக நடத்த வில்லை. முழு சுதந்திரம் கொடுத்தார். விஜய் வற்புறுத்தல் பேரில் படத்தின் டைட்டிலில் மோகன்லால் பெயரை முதலில் போட்டுள்ளோம். மதுரை பின்னணி கதையம்சத்தில் தயாராகியுள்ளது. தந்தை மகன் உறவை சித்தரிப்பதாக படம் இருக்கும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி