டெஹ்ரான்:-ஈரான்-ஈராக் இடையே கடந்த 1980 முதல் 1988 ஆண்டு வரை போர் நடந்தது. இந்த போர் குறித்த கதையானது ‘மீராஜிஹா‘ என்னும் பெயரில் ஈரானில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்திற்கான போர் காட்சிகளை எடுக்க தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள புனித பாதுகாப்பு சினிமா நகரத்திற்கு வாகானத்தில் வெடிப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன.அப்போது திடீரென அந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின. இதில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டைரக்டர் துணை நடிகர்கள் என 5 பேர் உயிரிழந்தனர்.
போர் காலங்களில் பயன்படுத்தப்படும் உண்மையான வெடிப்பொருட்களை போன்று திரைப்பட காட்சிகளுக்கு பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெடிவிபத்து நடந்துள்ளது. இதுகுறித்து ஈரான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி