சிறு நகரத்தில் வசிக்கும் தமிழ் கலாசார பெண் வேடமாக இருந்தது. தமிழ் ரசிகர்களை எளிதாக கவரக்கூடிய வேடம். இதில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கமர்ஷியல் படமாக வந்துள்ளது.இப்படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவங்களை மறக்க முடியாது. அவர் என்னை முழுமையாக மாற்றிவிட்டார். சினிமாவில் நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
‘வீரம்’ தலைப்பு அவருக்கு மிகவும் பொருத்தமானது. அவர் மிகவும் தைரியமானவர். தன்னை சுற்றி இருப்பவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அழகானது. படப்பிடிப்புக்கு வரும்போது லைட்பாய் முதற்கொண்டு அவரது ஊழியர்கள் என் ஊழியர்கள் எல்லோரிடமும் பாகுபாடு இன்றி சமமாக மதிப்பு கொடுத்து பேசுவார்.
எனக்கு இந்தப் படத்தில் வலுவான வேடம். தமிழ், தெலுங்கில் ரிலீசாகிறது. இந்திப் படங்களிலும் நடிக்கிறேன். தென் இந்திய மொழி படங்களில் நடிக்கவே எனக்கு அதிக விருப்பம் உள்ளது. தமிழில் எனக்கு பிடித்த படம் ‘பையா.’ தெலுங்கில் ‘100 சதவீதம் லவ்’ அண்ணன் தம்பியான சூர்யா, கார்த்தியுடன் நடித்து விட்டேன். இருவருமே கேரக்டர் மற்றும் வேலைகளில் வித்தியாசமானவர்கள்.நான் தனியாகத்தான் இருக்கிறேன். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டு இருக்கிறது. சரியான நேரத்தில் எனக்கு பொருத்தமானவரை சந்திப்பேன். அது நடக்கும்போது எல்லோருக்கும் தெரிய வரும்.
இவ்வாறு தமன்னா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி