செய்திகள் சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்…

சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்…

சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்… post thumbnail image

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை கும்பல் பொது மக்களை பீதியடைய செய்து வருகின்றன. கடந்த 6–ந்தேதி அதிகாலை “கீழப்பழுவூர்” கிராமத்திற்குள் புகுந்த டவுசர் கொள்ளையர்கள் 4 பேர் வீடு, கடை உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தன.

வீடு, வீடாக புகுந்து நகை பணங்களை கொள்ளையடித்தன. அதை பார்த்த ஜோதி என்ற பெண்ணை கம்பியால் தலையில் தாக்கி விட்டு அவரிடம் இருந்த 3 பவுன் தங்க நகையையும் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜோதி தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொள்ளையர்களின் அட்டகாசத்தால் கிராம பகுதியில் உள்ள பொதுமக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இரவு நேரங்களில் முன் பின் தெரியாத நபர்கள் கிராமத்திற்குள் நடமாடினால் அவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் டவுசர் கொள்ளையர்கள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை அவர்கள் சிக்கவில்லை.

இதற்கிடையில் அரியலூர் அருகே கயர்லாபாத் போலீஸ் சரகத்தை சேர்ந்த “காவானூர்” கிராமத்தில் புகுந்த டவுசர் கொள்ளையர் 4 பேர் வீடு வீடாக கொள்ளையடிக்க முயன்றனர். இதனை அந்த கிராமத்தை சேர்ந்த மல்லிகா, சந்திரா மற்றும் ராமலிங்கம் உள்ளிட்ட சிலர் பார்த்தனர். அவர்கள் நைசாக கிராம மக்களை ஒன்று திரட்டினர்.

பின்னர் வீடு புகுந்து கொள்ளையடித்துக் கொண்டிருந்த டவுசர் கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். பொது மக்கள் ஆவேசமாக நெருங்கியதை கண்ட கொள்ளையர்களில் 3 பேர் தலைதெறிக்க தப்பி ஓடினர். இதில் ஒருவன் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கிக்கொண்டான். அவனை கட்டிடம் ஒன்றில் உள்ள தூணில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை தொடர்ந்து டி.எஸ்.பி. தொல்காப்பியன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து கொள்ளையனை மீட்டனர்.

பின்னர் போலீஸ் நிலையத்திற்க்கு அழைத்து சென்று அவனிடம் விசாரித்த போது ஜெயங்கொண்டத்தை சேர்ந்த “ராஜா” என்று தெரிய வந்தது. அவன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவனிடம் இருந்து முழுமையான தகவல் பெற முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். பிடிபட்ட கொள்ளையனுடன் வந்த மற்ற டவுசர் கொள்ளையர் யார்– யார்? என்று அறிவதில் போலீசார் தீவிரம் காட்டி உள்ளன .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி