தூத்துக்குடி மாநகராட்சியில் ஆடிட்டராக வேலைபார்த்து வருபவர் செந்தில்குமார். இவருக்கும் எனக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதியன்று பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் திருமணம் பற்றி மாப்பிள்ளை வீட்டார் பேசவில்லை. இதுகுறித்து எனது தாயார், மாப்பிள்ளை செந்தில்குமாரிடம் பேசினார்.
அப்போது அவர், என்னையும், எனது குடும்பத்தினரையும் பிடிக்கவில்லை எனவும், கூடுதல் வரதட்சணை கொடுக்கும்பட்சத்தில் திருமணம் பற்றி பேசலாம் எனவும் கூறினார்.
இதனையடுத்து எனது பெற்றோர் மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஊர் அறிய திருமணம் நிச்சயம் செய்துவிட்டு, பாதியில் நின்றது குறித்து எனது தந்தை ஒட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். பின்னர் அவர்களின் அறிவுரையின்பேரில் எங்களுக்கு ஆகஸ்டு 1 ஆம் தேதியன்று திருமணம் நடந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார், என்னை எங்கள் வீட்டிலேயே விட்டுவிட்டு, கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிச்சென்றனர்.
இதுகுறித்து மீண்டும் எனது தந்தை சந்திரபாண்டி, சகோதரர் பாலமுருகன் ஆகியோர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே என்னை திருமணம் செய்துவிட்டு, அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்லாமல் துன்புறுத்தியதற்காகவும், என்னுடைய நிலையை எண்ணி எனது பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய செந்தில்குமார் குடும்பத்தினரை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.”இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், “மனுதாரரின் புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், எதிர்மனுதாரரின் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி