வங்காளதேசத்தில் வருகிற 5-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. முன்னாள் பிரதமர் “கலிதா ஜியா” புறக்கணித்து விட்டார். அதோடு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பேரணி, போராட்டம் நடக்கிறது. இதனால் வன்முறை வெடித்து பலர் உயிர் இழந்தனர். தேர்தல் அமைதியாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வன்முறை “சம்பவங்கள்” தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வன்முறை சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அமைதியா தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி