வியட்நாமின் இரண்டாவது பெரிய நகரான ஹோசிமின் சிட்டியை அடுத்த கேன் ஜியோ கடற்கரையில் சுற்றுலா சென்ற பள்ளிக் குழந்தைகள் 7 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் இறந்த குழந்தைகளுக்கு 12 முதல் 14 வயதிற்குள் இருக்கும் எனத் தெரிகிறது.பள்ளிக் குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர் கூறுகையில், “திடீரென வந்த பெரிய அலை கரையில் நின்று கொண்டிருந்த குழந்தைகளையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் 4 பேர் நீந்திக் கரை சேர்ந்து விட்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் ஆண்டுக்கு சராசரியாக 3,500 குழந்தைகள் கடலில் மூழ்கி இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு தழுவிய நீச்சல் பயிற்சி பாடத்திட்டம், போதிய வசதிகள் இல்லாததாலும், நிதிப் பற்றாக்குறையாலும் முடங்கியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி