புத்தாண்டை எவ்வித அசம்பாவித சம்பவங்களுக்கும் இன்றி பாதுகாப்பாகக் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல்துறை முழு ஏற்பாடுகளை செய்து வருகிறது.புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபான கூடங்களில் மட்டும் மதுபானம் விற்க வேண்டும், செவ்வாய்க்கிழமை இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஈவ்டீசிங்கில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், பிறரை தொந்தரவு செய்யும் வகையில் வண்டிகளில் ஹாரன் அடிக்கக் கூடாது. ரேஸில் ஈடுபடக் கூடாது. என 25க்கும் மேற்பட்ட விதிமுறைகளை காவல்துறை விதித்துள்ளது.
பாதுகாப்புப் பணியில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர். 300 வாகனங்களில் போலீஸார் ரோந்து செல்கின்றனர். குறிப்பாக கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை ஆகியவற்றில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி