அப்போது அந்த வழியாக ஒரு நாய் தனது வாயில் ஏதோ ஒன்றை கவ்வி கொண்டு வந்தது.கூர்ந்து பார்த்த போது, நாயின் வாயில் இருந்தது ஒரு குழந்தையின் பிணம் என்று தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், நாயை விரட்டினர். அப்போது நாய் குழந்தையின் பிணத்தை போட்டு விட்டு ஓடியது.
இதுபற்றி அப்பகுதி பெரியோர்களுக்கு தெரிய வர அவர்களும் பதறியடித்தபடி வந்தனர். நாய் கவ்வி கொண்டு வந்தது பெண் குழந்தை பிணம். அந்த பெண் குழந்தையின் தலைப்பகுதி இல்லை. உடல் பகுதி முழுவதையும் நாய் கடித்து குதறி இருந்தது.
அந்த குழந்தை பிறந்து சில மணி நேரம்தான் ஆகி இருக்கும். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த பெண் குழந்தையின் பிணம் கோபியில் எந்த பகுதியில் கிடந்தது? நாய் எங்கே இருந்து கவ்வி வந்தது? என்று தெரியவில்லை.கோபி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி