செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எளிமையான சீன அதிபர்..”ஸி ஜின்பிங்”..!!!

எளிமையான சீன அதிபர்..”ஸி ஜின்பிங்”..!!!

எளிமையான சீன அதிபர்..”ஸி ஜின்பிங்”..!!! post thumbnail image
சீனாவில், ஹோட்டலில் ஆய்வு நடத்த சென்ற “அதிபர்” அங்கு வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிட்டார்.

சீனாவில் அதிபராக இருப்பவர் “ஸி ஜின்பிங்”. இவர் பெய்கிங் நகரில் உள்ள ஹோட்டலில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

அனைவரும் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டனர். பின்பு, இவரும் வரிசையில் நின்று உணவை வாங்கினார்.

பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ரொட்டி வகைகள், வெங்காய பன் ரொட்டி வகைகள், பச்சை காய்கறிகள் வறுத்த ஈரல் போன்றவற்றை வாங்கி ருசித்து சாப்பிட்டார். சாப்பிட்ட உணவுக்காக 220 ரூபாயைக் கொடுத்தார். அதிபர் தங்களுடன் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு அவரைப் பாராட்டினர்.

சீனாவில் இதுவரை உயர் பதவியில் இருந்தவர்கள் எவரும் வெளியே வருவதில்லை. ஆனால் இதற்கு விதி விலக்காக அதிபர் நடந்து கொண்டார். இவரைப் பாராட்டி இணையதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி