கடந்த சில நாட்களுக்கு முன் “ஹிருத்திக் ரோஷன்” அளித்த ஒரு பேட்டியில், கருத்து வேறுபாடு காரணமாக, சுசன்னேவும், அவரும் பிரிந்து வாழ்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில், விவாகரத்துக்கு சுசன்னேவுக்கு ஹிருத்திக் ரோஷன் “ரூ.100 கோடி ஜீவனாம்சம்” கொடுக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதை சுசன்னே இப்போது கடுமையாக மறுத்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், இது முற்றிலும் யூகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட உண்மைக்கு மாறான செய்தி. தற்போதும் நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். எங்கள் குழந்தைகளின் நலனே தற்போது மிகவும் முக்கியமானது. இந்த இக்கட்டான தருணத்தில் எங்களை தனிமையில் விடுமாறு வேண்டுகிறேன் பேட்டி அளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி