பஞ்சாப் மாநிலத்தில் ரூ. 500 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றுகிறார்.
மொகாலி மாவட்டம் முல்லான்பூர் கிராமத்தில் அமையவிருக்கும் இந்த ஆஸ்பத்திரியில் முதல் கட்டமாக 100 படுக்கை வசதி செய்யப்படும்.
மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. ரூ. 500 கோடி இந்த ஆஸ்பத்திரி கட்டி முடிக்கப்படும்.
ஆஸ்பத்திரிக்கென மாநில அரசு 50 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை போன்று உருவாக்கப்படும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி