செய்திகள்,முதன்மை செய்திகள் நெல்லையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை…

நெல்லையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை…

நெல்லையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை… post thumbnail image
நோயாளிகளுக்கும், விபத்தில் சிக்குபவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை இவலசமாக செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை நியோ நேட்டல் என்ற பெயரில் குழந்தைகளுக்கான சிறப்பு சேவையையும் செய்து வருகிறது. ஆனால் இது பெரிய நகரங்களில் மட்டும் தான் செயல்படுகிறது. தென் மாவட்டமான நெல்லை மாவட்டத்தில் இந்த சேவை இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்துக்கு முதல் முறையாக ஒரு நியோ நேட்டல் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்சில் பச்சிளம் குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படும் போது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதி செயயப்பட்டுள்ளது. இந்த நியோ நேட்டல் ஆம்புலன்சில் குழந்தைகளுக்கு தொட்டில் போன்ற படுக்கை இன்குபேட்டர், வார்மர், மூச்சு விடுவதற்காக ஆக்ஜிசன் உள்ளிட்ட அவசர சிகிச்சை கருவிகள் உள்ளன.

குழந்தைகளை கவனிப்பதற்காக மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர்களும் பணியில் இருப்பர். இந்த ஆம்புலன்ஸ் நெல்லை மாவட்ட தலைமை மருத்துவமனையான பாளை ஐகிரவுண்ட்டில் நிறுத்தப்பட்டிருக்கும். குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தேவைப்படும் இடங்களுக்கு சென்று உதவுவார்கள். தேவைப்பட்டால் அவசர காலங்களில் அருகில் தூத்துக்குடி, குமரி மாவட்டத்துக்கும் இந்த ஆம்புலன்ஸ் சென்று உதவும்.

இந்த ஆம்புலன்ஸ் சேவை இன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி