செய்திகள்,முதன்மை செய்திகள் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்கள்…

நடுக்கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்கள்…

நடுக்கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்கள்… post thumbnail image
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு கொண்டு வரவேண்டும் என்று பிரதமரை சந்தித்த தமிழக மீனவ பிரதிநிதிகள் கூறினார். இந்த சமயத்தில் பாம்பனில் 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை 200 ஐ தாண்டி உள்ளது.

நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டுவதாக இலங்கை குற்றச்சாட்டு வைக்கிறது. ஆனால் மீனவ தரப்பிலோ எல்லை தாண்டவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

நேற்று புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சிறையில் ஏற்கனவே இலங்கை சிறைகளில் வாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றும் பாம்பன் பகுதியை சேர்ந்த 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 3 நாட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் மேக்லின்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில்: நாங்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை படையினர் கைது செய்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனையடுத்து நாங்கள் மீன்பிடிப்பை தொடராமல் அச்சமடைந்துதிரும்பி வந்து விட்டோம் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி