புதிய படங்கள் திருட்டுத்தனமான இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுகிறது. அதை தடுக்கும் வகையில் முறையான அனுமதியுடன் பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யும் நிறுவனங்கள் வந்திருக்கிறது. அவற்றில் ஒன்று கணெக்ட் பிளஸ் நிறுவனம். இதன் துவக்க விழா சென்னையில் நடந்தது. இதில் திரையுல முன்னணியினர் கலந்து கொண்டனர்.
உலகில் 86 நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் வெளிநாட்டு உரிமம் பெறும் விநியோகஸ்தர்கள். 10 முதல் 20 நாடுகளில் மட்டும் படத்தை தியேட்டரில் திரையிடுகிறார்கள். மற்ற நாட்டை சேர்ந்த மக்கள் புதிய படங்களை சம்பந்தம் இல்லாதவர்களின் சைட்டில் பணம் செலுத்தி பார்க்கிறார்கள்.
இதனால் கோடிக்கணக்கான பணம் கருப்பு சந்தையில் விளையாடுகிறது. அதை தடுக்கவே இந்த நிறுவனத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். தயாரிப்பாளர்களிடம் உரிமம் பெற்று எங்கள் சைட்டில் படத்தை பதிவேற்றம் செய்வோம். அதனை பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். அந்த பணத்தில் பெரும் பகுதியை தயாரிப்பாளருக்கு கொடுப்போம். இப்போது இந்த சேவை வெளிநாட்டு தமிழர்களுக்கு மட்டுமே அளிக்கிறோம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி