தமிழகத்தில், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை மற்றும் பதுக்கல் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை, திருச்சி மற்றும் எல்லையோர மாவட்டங்களான, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில், வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் மற்றும் அவற்றின் பெயரில் போலி லாட்டரி சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான, கேரளாவில், அம்மாநில அரசே, கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் வழங்குவதாக கூறி, லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்கிறது. இவற்றிற்கு, அங்குள்ள பிரபலங்கள், விளம்பர தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னையில், அயனாவரம், ஐ.சி.எப்., மற்றும் சில பகுதிகளில், பூட்டிய கடைகளுக்குள் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்கள் நலன் காக்க, லாட்டரியை முற்றிலும் தடை செய்த தமிழக முதல்வர், மீண்டும் சாட்டையை சுழற்றினால் மட்டுமே, இவற்றை முழுமையாக தடுக்க முடியும்.
போலி லாட்டரி சீட்டு வழக்குகளை பொறுத்தவரை முதலிடம் கோவை மாநகர் 160 இரண்டாவது இடத்தில், திருச்சி 112 உள்ளன. சென்னையில், 40 வழக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டங்களில், முதலிடத்தில், ஈரோடு 163; அடுத்தடுத்த இடங்களில், விழுப்புரம் 98; தஞ்சை 97 உள்ளன. ஒட்டு மொத்தமாக, கடந்த, 10 மாதங்களில் 1,831 வழக்குகள் பதிவாகியுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில், 2002 இறுதி வரை, தமிழக அரசு, வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள், ஒரு நம்பர், சுரண்டல் லாட்டரிகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருந்தன. இதன் மூலம் அரசிற்கு வருமானம் வந்தது. அதே நேரம், லாட்டரி சீட்டுக்களின் மீது மோகம் கொண்டு, அடிமையான பலர், குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்த சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்தன.எனவே, 2003 ஜனவரி மாதம்,தமிழக அரசின் லாட்டரி சீட்டு, ஒரு நம்பர், சுரண்டல், வெளிமாநில லாட்டரிகள் என, அனைத்தையும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தடை விதித்தார் .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி