கொலை வழக்கு ஒன்றில் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரணதண்டனை உறுதி படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி இளவரசர் ஒருவர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கினார். இந்த நிலையில் சவூதி சட்டப்படி கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் பெருந்தொகையை(ரத்தத்தொகை) கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவார்கள். கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும்.
ஆனால் மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதையடுத்து சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான உத்தரவினை சவூதி அரசின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சல்மான் பிறப்பித்துள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி