இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 210 பேரை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ராமதாஸ் குறை கூறியுள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக தமிழக முதல்வர் நினைக்கிறார். ஆனால் 35 முறை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியும் பயனில்லை என்று ராமதாஸ் குறை கூறியுள்ளார். நாகையில் 3,000 மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
மீன்வளத்துறை அமைச்சர் மீனவர்களை சந்தித்த போது குறையை கேட்கவில்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார். மீனவர்கள் அனைவரையிம் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி