செய்திகள்,முதன்மை செய்திகள் எய்ட்ஸ் பாதித்த மகனுக்கு பெண் தேடிய தந்தை…

எய்ட்ஸ் பாதித்த மகனுக்கு பெண் தேடிய தந்தை…

எய்ட்ஸ் பாதித்த மகனுக்கு பெண் தேடிய  தந்தை… post thumbnail image
மகாராஷ்டிராவின் புனே நகரில், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான, அந்த நோயாளிகள் அடங்கிய திருமண ஜோடி தேடும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகம், டில்லி, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கான ஜோடிகளை தேடி வந்திருந்தனர்.

அவர்களில், 72 வயது நபரும், வந்திருந்தார். அவரைப் பார்த்த பலரும், ‘இந்த வயதிலும் திருமண ஆசையா…! என, வியப்பில் ஆழ்ந்தனர். அவரிடம் கேட்ட போது, ”என், 41 வயது மகனுக்காக, பெண் தேடி, நான் இங்கு வந்துள்ளேன். திருமணத்திற்கு, அவன் மறுக்கிறான். அவனுக்காக, நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதற்காக வந்துள்ளேன்,” என்றார்.தன் மகன் பற்றி அவர் கூறியதாவது: பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், மூத்த அதிகாரியாக பணியாற்றும் என் மகனுக்கு, அந்த நோய் இருக்கிறது என்பது, 2010ல் தான் தெரிய வந்தது. விபத்து ஒன்றில் அவன் சிக்கிய போது, ரத்தம் அதிகமாக வெளியேறியதால், மருத்துவமனையில், ரத்தம் ஏற்றப்பட்டது.

பரிசோதனை செய்த போது அந்த ரத்தத்தில், எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும், எச்.ஐ.வி., நோய் கிருமி இருப்பது தெரியாமல் இருந்து விட்டோம். அடுத்த சில மாதங்களில், அமெரிக்கா செல்வதற்காக, ‘விசா’ பெறுவதற்காக, மருத்துவ பரிசோதனை செய்த போது தான், அவனுக்கு, எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது. அதற்குப் பின், அவன், மனதளவில் நொறுங்கிவிட்டான். திருமணம் செய்து கொள் என, பலமுறை கூறியும் ஏற்றுக் கொள்ளாமல் உள்ளான். அதனால் தான், அவனைப் போல், நோய் உள்ள மற்றொரு பெண்ணை தேடி இங்கே வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி