செய்திகள்,முதன்மை செய்திகள் இருவருக்கு சாம்பியன் விருது …

இருவருக்கு சாம்பியன் விருது …

இருவருக்கு  சாம்பியன் விருது … post thumbnail image
தேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில், பெட்ரோலியம் அணியின் சிந்து, ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

78வது சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் டில்லியில் நடந்தது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் பெட்ரோலியம் அணியின் பி.வி.சிந்து மற்றும் ஆந்திர பிரதேசத்தின் ரிதுபர்னா தாஸ் இருவரும் விளையாடினர்.

முதல் செட்டை 21—11 எனக் கைப்பற்றிய சிந்து 2வது செட்டை 21-17 என கைப்பற்றினார். மொத்தம் 29 நிமிடங்கள் நடந்த பைனலின் முடிவில் சிந்து 21-11, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பெட்ரோலியம் அணியின் ஸ்ரீகாந்த் குருசாய்தத் விளையாடினர்.
முதல் செட்டை 21-13 என வென்ற ஸ்ரீகாந்த் 2வது செட்டை 22-20 என போராடி வென்றார். மொத்தம் 40 நிமிடங்கள் நீடித்த பைனலில் ஸ்ரீகாந்த் 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி